[X] Close

ராகுல் காந்தி வெளியிட்டது போலி ‘ஸ்க்ரீன்ஷாட்’; ‘மோடிலை’ என்ற வார்த்தை அகராதியில் இல்லை: ஆக்ஸ்போர்ட் டிக் ஷனரி நிறுவனம் மறுப்பு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:16 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ‘மோடிலை’ (Modilie) என்ற வார்த்தை எங்கள் அகராதியிலேயே இல்லை என்று ஆக்ஸ்போர்ட் டிக் ஷனரி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி இடையேயான மோதல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

அண்மையில், ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அவர் தனது குடும்பத்தைத் தாக்கி பேசி வருவதுபோல தான் அவரின் குடும்பத்தைத் தரம் தாழ்த்தப்போவதில்லை. மாறாக அன்பு செலுத்துவோம் என்று ராகுல்காந்தி பேசியிருந்தார்.

ஆனால், அண்மையில் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் மோடி தொடர்பான புதிய பதிவு, சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறது. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியைப்பிரதிபலிக்கும் வகையில், அண்மையில் ஒரு ‘ஸ்க்ரீன்ஷாட்’ பதிவு செய்திருந்தார் ராகுல். அதில், ‘Modilie' என்கிறசொல்லை அறிமுகம் செய்திருந்தார்.

'Modilie' என்றால் தொடர்ந்து பொய் கூறிக் கொண்டிருப்பவர், உண்மையை மாற்றிப் பேசுபவர், பொய் சொல்லுவதற்குப் பழக்கப் பட்டவர், எவ்வித சிந்தனையும் இல்லாமல் பொய் கூறுபவர்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ட்விட்டரில் இது பதிவு செய்யப்பட்ட அடுத்த நிமிடம் வைரலாகப் பரவத் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு அகராதியைப் போல அது பிரதிபலித்ததால் அந்த ஆக்ஸ்போர்டு டிக் ஷனரி நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது, “மோடிலை என்ற வார்த்தை போலியானது. இப்படியொரு வார்த்தையே எங்களின் அகராதியில் இல்லை” என்று தெரிவித்துள்ளது. இதை பாஜக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.

ஆனால் ‘Modilie' என்கிற வலைதளமே காங்கிரஸ் சார்பில் உருவாக்கப்பட்டு பிரதமர் மோடி சொன்ன பொய்களும் உண்மைகளும் என அதில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close