[X] Close
 

விமானப் பயணிகளை வரவேற்கும் ரோபோ ராடா


robot-that-can-greet-fliers

  • பாரதி
  • Posted: 29 May, 2018 15:38 pm
  • அ+ அ-

விஸ்தாரா விமான நிறுவனம் 'ராடா' (RADA) என்ற ரோபோவைப் பணியமர்த்தவுள்ளது. இந்த ரோபோ பயணிகளை வரவேற்பதோடு, அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கவும் வல்லது.

இது குறித்து விஸ்தாரா விமான நிறுவனம், "இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ராடா ஜூலை மாதம் முதல் பணியமர்த்தப்படும். விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னர் காத்திருக்கும் அறையில் பயணிகளுக்கு ராடா உதவியாக இருக்கும். 

ராடாவால் பயணிகளின் போர்டிங் பாஸ்களை சரி பார்க்க முடியும். எந்த கேட் வழியாக பயணிகள் செல்ல வேண்டும் என்றத் தகவலை அளிக்க முடியும். பயணிகள் செல்லவிருக்கும் இடத்தின் தட்பவெப்ப நிலை என்னவென்பதைத் தெரிவிக்க முடியும். அதுதவிர விஸ்தாரா விமான நிறுவனத்தின் சேவை குறித்தும் விளக்க முடியும்.

இதுதவிர குழந்தைகளுடன் சிறு சிறு கணினி விளையாட்டுக்களை விளையாட முடியும். பெரியவர்களுக்காக பாடல்களை இசைக்க முடியும் வீடியோக்களை ப்ளே செய்ய முடியும்.

வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பெற்று அதற்கேற்ப ராடாவை சீரமைப்பு செய்வோம்" எனத் தெரிவித்துள்ளது.

விஸ்தாரா விமான நிறுவனம் டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டாக சேர்ந்து உருவாக்கியது. இதில், டாடா சன்ஸ் குழுமம் 51% பங்குகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close