[X] Close

கோட்சேவுக்கு ஆதரவான கருத்து: பிரக்யா உட்பட 3 பேருக்கு பாஜக நோட்டீஸ்


3

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:13 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர், மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே உள்ளிட்ட 3 பேரிடம் விளக்கம் கேட்டு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான பிரக்யா சிங் தாக்குரிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வியெழுப் பினர். அப்போது அவர், 'கோட்சே ஒரு தேசபக்தர்' எனக் கூறினார். அவரது இந்தக் கருத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரக்யாவின் பேச்சுக்கு பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே தமது கருத்தினை திரும்பப் பெற்று கொள்வதாக அவர் அறிவித்தார்.

கோட்சேவுக்கு ஆதரவு

இந்நிலையில், இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே, பாஜக மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவும், எம்.பி. நளீன் குமார் காட்டீலும் கோட்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, கர்நாடகா வைச் சேர்ந்த எம்.பி. நளீன் குமார்காட்டீல் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:கோட்சே ஒருவரை கொன்றார். பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 72 பேரை கொலை செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோ 17 ஆயிரம் பேரை கொலை செய்திருக்கிறார். இவர்களில் யார்மிகக் கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதேபோல், மத்திய அமைச்சரான அனந்த்குமார் ஹெக்டேவும்கோட்சேவுக்கு ஆதரவாக ட்விட்ட ரில் கருத்து தெரிவித்திருந்தார். இவர்களின் கருத்துகள் பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

மேலும், மகாத்மா காந்தியை பாஜக தொடர்ந்து அவமதித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன.

இந்நிலையில், கோட்சேவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கமளிக்கக் கோரி பிரக்யா சிங் தாக்குர், அனந்த்குமார் ஹெக்டே, நளீன் காட்டீல் ஆகிய 3 பேருக்கும் பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், "கோட்சே குறித்து தெரிவித்த கருத்துகளை மேற்குறிப்பிட்ட 3 பேரும் திரும்பப் பெற்றுவிட்டனர். மேலும், அதற்காக அவர்கள் மன்னிப்பும் கோரியுள்ளனர். ஆனால், அவர்களின் கருத்துகளானது பாஜகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடு களுக்கும் முற்றிலும் எதிரானதாகஉள்ளது. எனவே, தங்களின் கருத்துதொடர்பாக விளக்கமளிக்குமாறு கட்சி தலைமை சார்பில் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close