[X] Close

பாஜகவுடன் கூட்டணி முறிவு: நாகா மக்கள் முன்னணி ஆலோசனை


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:08 am
  • அ+ அ-

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மணிப்பூர் மாநிலத்திலுள்ள நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் என்பிஎப் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளை நசுக்கப் பார்க்கிறது பாஜக என்று மணிப்பூர் என்பிஎப் மாநிலத் தலைவர் அவாங்பு நெவ்மாய் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில் என்பிஎப் கட்சி 4 எம்எல்ஏக்களைப் பெற்றுள்ளது. அங்கு பாஜக-என்பிஎப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் பதவி வகிக்கிறார். என்பிஎப் கட்சியைச் சேர்ந்த லோஷி டிகே அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் அவாங்பு நெவ்மாய் கூறும்போது, “கூட்டணி அமைக்கும்போது தெரிவித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. பெரிய அண்ணன் தோரணையில் பாஜக நடந்து வருகிறது. கூட்டணியில் தொடர்வதா அல்லது விலகுவதா என்பது தொடர்பாக நாங்கள் விரைவில் ஆலோசிக்கவுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் பிஜோய் கூறும்போது, “கூட்டணியில் இணையும்போது எங்களுக்கு எந்த அமைச்சர் பதவியும் வேண்டாம் என்று என்பிஎப் தெரிவித்தது. ஆனால் தற்போது அதிக அளவிலான கோரிக்கைகளை வைக்கிறார்கள். எங்கள் கட்சி மீது என்பிஎப் கூறும் புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. உண்மை அல்ல” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close