[X] Close

காங். வேட்பாளர் மனைவிக்கு சுவிஸ் வங்கியில் ரூ.7 கோடி


7

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:03 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடி இருப்பதாக அவரது பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சுனில் குமார் ஜாகர். இவரை எதிர்த்து அத்தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல், பாஜக சார்பில் களம் காண்கிறார்.

குருதாஸ்பூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை (மே 19) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் வேட்பாளரான சுனில் குமார் ஜாகர், தமது வேட்பு மனுவை அண்மையில் தாக்கல் செய்தார். அதனுடன், தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் அவர் சமர்ப்பித்தார்.

அதில், அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.1.53 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மனைவி பெயரில் ஸ்விஸ் வங்கியில் ரூ.7.37 கோடி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுதவிர, தமது கையிருப்பாக ரூ.4.49 லட்சமும், தமது மனைவியின் கையிருப்பாக ரூ. 1.38 லட்சமும் இருப்பதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு வங்கிகளில் ரூ.1.23 கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close