[X] Close

அமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர்: பிரியங்கா காந்தி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:02 am
  • அ+ அ-

அமிதாப் பச்சனை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லலிதேஷ்பதி திரிபாதியை ஆதரித்து பிரியங்கா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “உலகின் மிகப்பெரிய நடிகரை நீங்கள் பிரதமராக தேர்வு செய்துள்ளீர்கள். இதற்கு பதிலாக அமிதாப் பச்சனை நீங்கள் தேர்வு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் யாரும் உங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை” என்றார்.

மிர்சாபூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அப்னா தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014 தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் சமுத்ரா பிந்துக்கு எதிராக 2.19 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் இம்முறை மிர்சாபூரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே மிர்சாபூரில் நேற்று பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தில் எஸ்பிஎஸ்பி கட்சித் தொண்டர்களும் தங்கள் கொடியுடன் காணப்பட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close