[X] Close

'பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை மோடி தன் வீட்டில் அடைத்துவைத்தார்': ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 16:35 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை பிரதமர் மோடி தனது ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் அடைத்துவைத்ததாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை பிரதமர் மோடி தனது ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் அடைத்துவைத்தார். இது சத்தியம். சிறப்பு பாதுகாப்புப் படையில் இருக்கும் சிலர் எனது பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இதை என்னிடம் சொன்னார்கள்" எனக் கூறினார்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணியளவில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பாஜகவை, பிரதமரை விமர்சிக்க எடுத்துள்ள முக்கிய ஆயுதமே பணமதிப்பிழப்பு விவகாரம்தான். இந்நிலையில், பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை பிரதமர் மோடி தனது ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் அடைத்துவைத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி.

கனவு உலகில் வாழும் மோடி:

ராகுல் மேலும் பேசும்போது, பிரதமர் மோடி கனவுலகில் வாழ்வதாகவும் ராகுல் கிண்டல் செய்தார். அண்மையில் பாலாகோட் தாக்குதல் குறித்து மோடி பேசியதை சுட்டிக்காட்டி ராகுல் கிண்டல் செய்தார்.

"ஒரு பிரதமரின் அறிவுக்கூர்மை எந்த அளவில் இருக்கிறது என்று பாருங்கள். உணர்த்தியது. பாகிஸ்தான் ராடாரில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்க மேகக்கூட்டங்கள் இருந்தன. ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்று கூறினேன் என பிரதமர் கூறுகிறார். அவர் ஏதோ கனவுலகில் வாழ்கிறார். யாருடைய ஆலோசனையை கேட்க வேண்டுமோ அதைக்கூட புறக்கணிப்பவராக இருக்கிறார்" என ராகுல் பேசினார்.

பாஜக 5 ஆண்டுகளாக நாட்டு மக்களை ஏமாற்றியதே தவிர வேறு ஏதும் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் ஏழை மக்களுக்காக நியாய் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறது என்று ராகுல் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close