[X] Close

தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை: பஞ்சாப் முதல்வர் மீது சித்து மனைவி மீண்டும் புகார்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 14:31 pm
  • அ+ அ-

அமித்சர் தொகுதியில் போட்டியிட விரும்பினேன், ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு என்னிடம் கூறினார்கள், முதல்வர் அம்ரீந்தர் சிங் எனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் மீண்டும் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்து, போட்டியிட அவர் மறுத்து விட்டார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. பாஜக - அகாலிதளம் ஓரணியாகவும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகின்றன. இதனால் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் அமித்சர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு போட்டியிட, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேட்டியளித்த ‘‘சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. போட்டியிட அவர் விரும்பவில்லை’’ எனக் கூறி இருந்தார்.

 

இதற்கு நவ்ஜோத் கவுர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அமித்சர் தொகுதி தான் எனது சொந்த ஊர். எனவே அங்கு போட்டியிடவே நான் விரும்பினேன். ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு கூறினார்கள். தசரா சம்பவத்தால் எனக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை என்றார்கள்.

அவர்கள் சொல்லும் தொகுதியில் எனக்கு யாரையும் தெரியாது. பிறகு அங்கு எப்படி என்னால் போட்டியிட முடியும். அமித்சர் தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் வழங்காமல் முதல்வர் அம்ரீந்தர் சிங் மற்றும் ஆஷா குமாரியும் மறுத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close