[X] Close

சாராதா சிட்பண்ட் வழக்கு: கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையருக்கு 7 நாள் அவகாசம்: சிபிஐ சட்டப்படி செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி


7

  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:57 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் இன்று விலக்கிக்கொண்டது.

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்குள் தனக்குத் தேவையான சட்டரீதியான தீர்வை  ராஜீவ் குமார் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன.

விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.

இந்நிலையில்,கடந்த பிப்ரவரி மாதம் ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர். சிபிஐ நடவடிக்கையை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கை விசாரித்துவரும் சிபிஐ முன் ராஜீவ் குமார் நேரில் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அவரை கைது செய்யவும் சிபிஐக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஆனால், சிட்பண்ட் வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தும் அதற்கு நீதிமன்றம் சம்மதிக்கவில்லை, முறையான ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரியது.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ராஜீவ் குமார் தரப்பில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் மீது சிபிஐ வழக்கை போலியாக தொடுத்து, பழிவாங்கும் நோக்கில் ஜோடித்துள்ளது,  ராஜீவ் குமாரின் போலீஸ் வாழ்க்கை நேர்மையானது, எந்தவிதமான ஊழல்கறையும் அற்றவர். கடந்த 2015-ம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் விருதுபெற்றவர். உள்துறை அமைச்சகத்தால் ஆய்வு செய்தபின்புதான் இந்த விருதைப் பெறமுடியும். இவர் மீது ஏதேனும் புகார் இருந்தால் இந்த விருது வழங்க முடியுமா.

இன்றைய தேதிவரை ராஜீவ்குமார் ஆதாரங்களை அழித்துவிட்டார் என்பதற்கான ஆதாரங்களை சிபிஐ அமைப்பால் தாக்கல் செய்யமுடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது பாதுகாப்பில் எடுத்து விசாரிக்க விரும்புகிறது. ராஜீவ் குமார் இந்த வழக்கில் குறிவைக்கப்பட ஏதோ காரணம் இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமார் வீட்டை சோதனையிட அவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்றனர். அவரின் மனைவி வீட்டில் இருந்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டு கூறி, அவர் வீட்டில் ஆதாரங்கள் மறைக்கப்பட்டு இருப்தாக சிபிஐ கூறுகிறது. இந்த சிட்பண்ட் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த டிஜிபி அர்னாப் கோஷிடம் எந்தவிசாரணையும் நடத்தாமல், குமாரிடம் மட்டும் வேண்டுமென்றே சிபிஐ விசாரணை நடத்துகிறது. ராஜீவ்குமாருக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை " எனத் தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், " விசாரணையின்போது, மின்னணு பொருட்கள் குறித்த தடவிய அறிவியல் அறிக்கையை கேட்டபோது அது குறித்து இன்னும் எங்களுக்கு அளிக்கவில்லை. அந்த அறிக்கை விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும். சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டதில் இருந்து அந்த அறிக்கையை கேட்கிறோம், ஆனால், வழங்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது, பென்டிரைவ், லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை மறைக்கவில்லை என்று எவ்வாறு நம்புவது" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பிறப்பித்த உத்தரவில், " இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்குள் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சட்டரீதியான தீர்வை தேடிக்கொள்ளலாம். பிப்ரவரி 5-ம் தேதி பிறப்பித்திருந்த கைது செய்யத் தடை எனும் உத்தரவை விலக்கிக்கொண்டோம். இந்த வழக்கில் சிபிஐ சட்டப்படி செயல்படலாம்" எனத் தெரிவித்தார். அதாவது அடுத்த 7 நாட்கள்வரை ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐக்கு தடை இருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close