[X] Close

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? - உளவுத்துறை எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 17 May, 2019 11:15 am
  • அ+ அ-

காஷ்மீரில் ஸ்ரீநகர், அவந்திபுரா உள்ளிட்ட விமானப்படைத் தளங்களை குறி வைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45  சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் பலியாகினர். இந்நிலையில்,  இதேபோன்று பெரும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தேவையான முனனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காஷ்மீரில் புல்வாமா உள்ளிட்ட பல பகுதிகளில் ராணுவதளங்கள்,  விமானப்படை தளம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுராவில் உள்ள விமானப்படை தளங்களில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே நெடுஞ்சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close