[X] Close

காக்கி கால்சட்டை போல் கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடையாளமே: ஆசம்கான்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 11:05 am
  • அ+ அ-

-ஏஎன்ஐ

காக்கி கால்சட்டை போல் கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அடையாளமே எனக் கூறியுள்ளார் சமாஜ்வாதி கட்சியின் போபால் வேட்பாளர் ஆசம்கான்.

முன்னதாக மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசப்பற்றாளர் என்று மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஆசம் கான், "பிரக்யா தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. காக்கி கால்சட்டையைப் போல கோட்சே ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அடையாளம்தான். நமது தேசம் காந்தி அல்லது கோட்சே யாருடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். பிரக்யா தாக்கூர் போன்றவரை பாஜக கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும்" என்று கூறினார்.

இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கும் பிரக்யா தாக்கூர் பேச்சை கண்டித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், தாக்கூரை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரவும் வலியுறுத்தினார். அதேபோல் பிரக்யாவும் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரவக்குறிச்சியில் பேசிய மக்கள் நீதி மய்ய கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது. பிரதமரே விளக்கம் அளிக்கும் அளவுக்கு கமலின் கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close