[X] Close

வெறும் வெற்றியல்ல; இமாலய வெற்றி: மோடிக்கு ஆதரவாக வாரணாசியில் திரண்ட பாஜக நிர்வாகிகள்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:55 am
  • அ+ அ-

வராணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் முன்னாள் எம்எல்ஏவான அஜய்ராய் போட்டியிடுகிறார்.

2014 தேர்தலிலும் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ராய், வெறும் 75,614 வாக்குகள் பெற்றிருந்தார். இவருடன் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், சுமார் 2 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடம் வகித்திருந்தார். இங்கு வெற்றி பெற்ற மோடிக்கு 5.81 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன. பிரதமர் மோடி 371,785 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் வாரணாசியில் சுமார் 3 லட்சம் பேர் கலந்துகொண்ட மிகப்பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பிறகு மோடி 2 தடவை வாரணாசி சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரம் நிறைவு பெறும் இன்றும் அவர் வாரணாசியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி அங்கு அதிகமாக பிரச்சாரம் செய்யவிட்டாலும், அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பட்டாளமே அங்கு களமிறங்கி  பணியாற்றி வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் ஆகியோரும் பாஜக பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர். மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா மே 13-ம் தேதியில் இருந்து வாரணாசியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதுமட்டுமின்றி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜவர்த்தன் சிங் ரத்தோர் உள்ளிட்டோர் இங்கு பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக மெகா பேரணிகள் நடத்துவதுடன் வீடு வீடாக சென்றும் பிரச்சாங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற இலக்கை தாண்டி, அவரை இமாலய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவினர் திரண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்தார்.  சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் போட்டியிடுகிறார். எனினும் அவர் பெயரளவிலேயே பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close