[X] Close
 

நோன்பு வைக்க இஸ்லாமியர்களை துயிலெழுப்பும் சீக்கியர்: வைரலாகும் வீடியோ


sikh-man-waking-up-muslim-neighbours-for-pre-dawn-meal

  • பாரதி
  • Posted: 29 May, 2018 12:00 pm
  • அ+ அ-

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் முஸ்லிம்கள் நோன்பு வைக்க ஏதுவாக அவர்களை துயிலெழுப்ப சீக்கியர் ஒருவர் தோல் வாத்தியத்தை இசைத்து அறைகூவல் விடுக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்மையோ, தீமையோ ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உலகில் எதுவாக இருந்தாலும் இணையத்தில் வேகமாக வைரலாகப் பரவிவிடுகிறது. அந்த வகையில்,  முஸ்லிம்கள் நோன்பு வைக்க ஏதுவாக அவர்களை துயிலெழுப்ப சீக்கியர் ஒருவர் தோல் வாத்தியத்தை இசைத்து அறைகூவல் விடுக்கும் காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மேஷராத்தி எனப்படும் இஸ்லாமியர்களை நோன்பு காலத்தில் துயிலெழுப்பி காலை உணவை உண்ண அழைப்பு விடுக்கும் பணியை ஒரு சீக்கியர் செய்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தெருக்களில் பெரிய வாத்தியத்துடன் தெருக்களில் உலா வரும் அந்த சீக்கியர் கிட்டத்தட்ட ராகம்பாடி ஷேரி எனும் வைகறைக்கு முந்தையை நோன்பு உணவை உண்ண எழுந்திருக்குமாறு அழைப்பு விடுக்கிறார். பின்னர் சத்தமாக வாத்தியக் கருவியை இசைக்கிறார்.

"அல்லாவின் அன்பர்களே.. சொர்க்கத்தை தேடுபவர்களே.. படுக்கையிலிருந்து எழுந்து வாருங்கள். நோன்பை ஆரம்பியுங்கள்" என அவர் அழைக்கிறார். மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close