[X] Close

தேச துரோக சட்டம் கடுமையாக்கப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:28 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் பாஜக வேட்பாளருக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது. மேலும், ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸுக்கு எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும். வாக்கு வங்கிக்காக தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்யவும் காங்கிரஸ் தயங்காது.

ஆனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், தேசத்துரோக சட்டம் மேலும் கடுமையானதாக மாற்றப்படும் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close