[X] Close

தேர்தல் ஆணையத்துக்கு கரும்புள்ளி: ரன்தீப் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:19 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட வன்முறையை காரணம் காட்டி, அங்கு தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்கூட்டியே முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மீதான கரும் புள்ளி ஆகும். குறிப்பாக, பிரதமர் மோடியின் திட்டமிட்ட 2 பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன சட்டத்தின் 324-வது பிரிவின்படி (அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குதல்) தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படாமல், தனது கடமையிலிருந்து விலகி உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையையும் சுதந்திரத்தையும் இழந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணைய உயர் பதவிகளுக்கான நியமன நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, இத்தகைய நியமனங்கள் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close