[X] Close

தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: பிஎஸ்பி தலைவர் மாயாவதி புகார்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:18 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து மாயாவதி லக்னோவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு பிரச்சினைகளில் தோல்வி அடைந்துவிட்டது. இதிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜகவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை குறிவைத்துள்ளனர்.

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, வன்முறையில் ஈடுபட்ட அக்கட்சியினர் வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். இதைக் காரணம் காட்டி ஒரு நாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களவைத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close