[X] Close

மறு வாக்குப்பதிவுக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 07:22 am
  • அ+ அ-

-என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி 175 சட்டமன்றம், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பல மையங்களில் வாக்குஇயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால், மறு வாக்குப்பதிவு நடத்த பல கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தின.

இதையடுத்து, 5 மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை 19-ம் தேதி மேற்கண்ட மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த மறுவாக்குப்பதிவு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பல இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி தொகுதியில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரகிரி தொகுதிவேட்பாளர் நானி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடந்து 2 நாட்களில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு கோரியதை கண்டுகொள்ளதாக தேர்தல் ஆணையம், தற்போது 32 நாட்கள் கழித்து தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் இடங்களில் மட்டும் மறு வாக்கு பதிவு நடத்துவது ஏன்? என அவர்கள் கேள்வியெழுப்பினர்.

பின்னர், போலீஸார் இதில் தலையிட்டு தெலுங்கு தேச கட்சியினரை கலைந்து போக செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close