[X] Close

பணமதிப்பு நீக்க ‘ஊழல்’ குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வைப்போம்: மணீஷ் திவாரி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 20:37 pm
  • அ+ அ-

காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடித்தால் பணமதிப்பு நீக்க ‘ஊழல்’ குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

 

நூறுகோடி ஆயிரம் கோடிகளைத் தாண்டிய ஊழலாகும் பணமதிப்பு நீக்கம் என்பது, அதற்கான பொறுப்பை நாம் சரியாக நிலை நிறுத்த வேண்டும், என்று மணீஷ் திவாரி தெரிவித்தார்.

 

பணமதிப்பு நீக்கம் ஒரு நிதிமுறைகேடு மட்டுமல்ல, அது ஒரு பொருளாதாரப் படுகொலை, அதற்கான பொறுப்பை நாம் நிலை நிறுத்தியாக வேண்டும். காரணமானோரை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்.

 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவோம்.

 

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறிக்கோளற்றது  எதேச்சதிகாரமானது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் அது தாக்கியது. நாடு முழுதும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதரங்களை இழந்து தவித்தனர். அதனால்தான் அதை விசாரிக்க வேண்டும் என்கிறோம்.

 

நவம்பர் 8, 2016- இரவு ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது, ஆனால் அதே அளவு தொகை மீண்டும் அச்சிடப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய தேவையிருக்கிறது”

 

இவ்வாறு கூறினார் மணீஷ் திவாரி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close