[X] Close

ஆசிரியர் தகுதி தேர்வில் 10% இடஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


10

  • kamadenu
  • Posted: 16 May, 2019 15:25 pm
  • அ+ அ-

மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதில் மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நாடு முழுவதும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை எனக் கூறி, ரஜ்னீஷ் குமார் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஜனவரி மாதம் 16-ம் தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இரு தினங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தகுதித் தேர்வுகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் இருக்க முடியாது. இது முற்றிலும் தவறான கருத்து. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) என்பது ஆசிரியர் வேலையில் சேருவதற்கான தகுதியை அடைவதற்கான ஒரு தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்பது, வேலையில் சேரும்போது மட்டுமே வரும்’’ என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

எனினும் இந்த வழக்கை வியாழக்கிமை  விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close