[X] Close

கங்கையின் மைந்தனாக வந்தார்; ரஃபேல் ஏஜெண்டாக வெளியேறுவார்: மோடியை சாடிய சித்து


  • kamadenu
  • Posted: 16 May, 2019 14:21 pm
  • அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, பிரதமர் நரேந்திர மோடியை 'ரஃபேல் ஏஜென்ட்' என்று விமர்சித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய சித்து, "நரேந்திர மோடி, ரஃபேல் பேரத்தில் ஆதாயம் பெற்றாரா இல்லையா என்பதை அவரிடமே நான் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் வேண்டுமானால் நாட்டின் எந்தப் பகுதியிலும் நேருக்கு நேர் விவாதத்தை ஏற்பாடு செய்யட்டும்.

ராகுல் காந்தி பீரங்கியைப் போன்று பலம் வாய்ந்தவர். நான் ஏகே-47 ரக துப்பாக்கியைப் போன்றவன். என்னை எதிர்த்து மோடி விவாதத்துக்கு வரத் தயாரா? நான் எப்போதுமே ஊழல் செய்ததில்லை. ஊழல் செய்ய யாரையும் அனுமதித்ததில்லை. மோடி 2014-ல் கங்கையின் மைந்தனாக வந்தார். இப்போது ரஃபேல் ஏஜெண்டாக வெளியேறவிருக்கிறார்" என்று விமர்சித்தார்.

மோடி தூய்மை கங்கை திட்டத்தை முன்வைத்து வாரணாசி தொகுதியிலிருந்து வெற்றிபெற்றதை சுட்டிக் காட்டவே சித்து அவரை கங்கையின் மைந்தன் எனக் கூறியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close