[X] Close

திமுகவிலிருந்து மன்மோகன் சிங்குக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுமா? 2020 வரை காத்திருக்க வேண்டுமா?


2020

  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:59 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் ஜூன் மாதம் முடியும் நிலையில், அவருக்கு திமுக சார்பில் சீட் வழங்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறு வழங்காவிட்டால், எம்.பி. ஆவதற்கு சில காலம் மன்மோகன் சிங் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார். அவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 14-ம் தேதியோடு முடிகிறது. 5-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்மோகன் சிங், சான்டியுஸ் குஜூர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவதால் வரும் ஜூன் 7-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான தேர்தல் அறிவிக்கை வரும் 21-ம் தேதி வெளியிடப்படஉள்ளது.

அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லை.

இதனால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங்கை அமரவைப்பதற்கு சிறிது காலம் காங்கிரஸ் கட்சி காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், அசாம் மாநிலத்தில் காலியாகும் இரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு இடத்தை ராஷ்ட்ரிய லோக் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் பாஸ்வான் போட்டியிடாததால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி.வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்க வேண்டுமானால், சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

அதாவது, தற்போது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சிலர் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெற்றால், காலியாகும் அந்த இடத்தில் மன்மோகன் சிங்கிற்கு இடம் ஒதுக்கப்படலாம்.

இதற்கிடையே வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாகிறது. இதில் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், திமுக நினைத்தால் மன்மோகன் சிங்கிற்கு ஒரு இடத்தை வழங்க முடியும்.

ஒருவேளை வழங்காவிட்டால், மன்மோகன் சிங் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாவதற்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

ஏனென்றால், அப்போது, 55 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதால், காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கும் அப்போது மன்மோகன் சிங்கிற்கு ஒதுக்கப்படும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close