[X] Close

'பணமதிப்பிழப்பு செய்யும் முன் மன்மோகன் சிங் ஆலோசனையை மோடி கேட்டிருக்க வேண்டும்': ராகுல் காந்தி கருத்து


  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:05 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவருவதற்கு முன் மன்மோகன் சிங் ஆலோசனையை பிரதமர் மோடி கேட்டிருநதால், நாட்டின் பொருளாதாரத்தை அழித்திருக்கமாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தப்படுகிறது. 6 கட்டத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 7-ம் கட்டத் தேர்தலுக்காக தீவிரவமாக பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

பஞ்சாப் மாநிலம் பர்காரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி கிண்டலும், கேலியும் செய்தார். ஆனால், மோடியின் 5 ஆண்டுகள் ஆட்சியின் முடிவில் இப்போது மன்மோகனை கிண்டல் செய்ய முடியாது. ஏனென்றால், தேசமே மோடியைப் பார்த்து கிண்டல் செய்கிறது.

பிரதமர் மோடி தனது இரு முடிவுகளால் தேசத்தின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் கொண்டுவருவதற்கு முன்பும், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கு முன்பும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

rahul.jpg 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டின் பொருளாதாரம் 2 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று மன்மோகன் சிங் முன்கூட்டியே சரியாகக் கணித்தார்.

மன்மோகன்சிங் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை தூங்கும் யானையோடு தொடர்புபடுத்து பேசினார். அப்படியென்றால், பஞ்சாபில் உள்ள விவசாயிகள் பசுமைப்புரட்சிக்கு செய்த கடின உழைப்பை என்னவென்று சொல்வார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close