[X] Close

நிச்சயதார்த்தம் முடிந்து திரும்பியபோது ஆந்திராவில் சாலை விபத்து பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு


17

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:21 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

கர்னூல் மாவட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்துகொண்ட பிறகு சொந்த ஊரான கத்வால் மாவட்டம், ராமாபுரம் திரும்பும்போது விபத்தில் சிக்கினர். இந்நிலையில் காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று 2 பேர்இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து கர்னூல் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே இடத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 29 பேர் விபத்தில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close