[X] Close

போதை மருந்து விவகாரம் தெலுங்கு திரையுலகினர் விடுவிக்கப்படவில்லை: கலால் துறை அதிகாரிகள் விளக்கம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:18 am
  • அ+ அ-

-என்.மகேஷ்குமார்

போதை மருந்து விவகாரம் தொடர்பாக தெலுங்கு திரையுலகினர் 62 பேரில் ஒருவரும் விடுவிக்கப்படவில்லை என தெலங்கானா கலால் துறை விளக்கமளித்துள்ளது.

போதை மருந்துகளை பயன்படுத்துவது, விற்பனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என மொத்தம் 62 பேரிடம் கலால் துறை அதிகாரிகள் 2017-ம் ஆண்டு விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த 62 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களை கலால் துறை அதிகாரிகள் நேற்று சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் இதுவரை யாருடைய பெயரையும் குற்றப் பத்திரிக்கையில் இருந்து நீக்கவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனை பெற்றே தீர வேண்டும் என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close