[X] Close

ராகுலுக்கு எதிராக குற்ற முகாந்திரம் இல்லை: டெல்லி நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:17 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

‘‘பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியது தொடர்பான புகாரில், ராகுல் காந்திக்கு எதிராக குற்ற முகாந்திரம் இல்லை’’ என்று நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

‘‘கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியை ராகுல் காந்தி தரக்குறைவாகப் பேசினார். பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் ரத்தத்துக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதாகவும், அவர்களுடைய தியாகத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறார் என்றும் ராகுல் பேசியுள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ராகுல் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி வழக்கறிஞர் ஜோகிந்தர் துலி என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதையடுத்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை (ஏடிஆர்) தாக்கல் செய்யும்படி டெல்லி போலீஸுக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் சமர் விஷார் முன்னிலையில், டெல்லி போலீஸார் ஏடிஆர் அறிக்கையை நேற்று தாக்கல் செய்தனர்.

அதில், ‘‘புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கும் போது, ராகுல் காந்தி ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றம் செய்துள்ளதற்கான முகாந்திரம் இல்லை. மேலும், அவதூறாகப் பேசியதாக கருதினால், பேசியவர் மீது சம்பந்தப்பட்டவர்தான் அவதூறு வழக்கு தொடர முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close