[X] Close

ஒடிசாவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பீடு: ஃபானி புயல் பாதிப்பு குறித்து மத்தியக் குழுவிடம் அறிக்கை


12

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:19 am
  • அ+ அ-

ஃபானி புயலால் ஒடிசாவில் ரூ.12000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த 3-ம் தேதி ஒடிசாவின் 14 மாவட்டங்களை தாக்கியது. இதில் 64 பேர் உயிரிழந்தனர். 5 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக ஒடிசாவில் மத்தியக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த குழுவிடம், புயல் சேதம் தொடர்பான முதல்கட்ட அறிக்கையை ஒடிசா அரசு வழங்கியுள்ளது. அதில், மாநிலத்துக்கு தோராயமாக ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சொத்துகளுக்கு மட்டும் ரூ. 5,175 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், புயல் நிவாரணம் உள்ளிட்ட மீட்புப் பணிகளுக்கான செலவு ரூ.6,767.56 கோடி எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் ஏ.பி.பதி கூறியதாவது:முதல்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சேத மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளது. விரிவான அறிக்கைக்கு பிறகே அது தெரியவரும். இந்நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதி, சிறப்பு பேரிடர் நிவாரண நிதி உதவி தொடர்பான விதிமுறைகளை தளர்த்தும்படி மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

புரி மாவட்டத்தில் மட்டும் 75 மின் கோபுரங்கள் சாய்ந்துள்ளன. இதனை சீர்செய்ய அதிக அளவில் முதலீடு தேவைப்படுகிறது என அவர் கூறினார்.

மத்தியக் குழுவின் தலைவரான மத்திய உள்துறை கூடுதல் செயலர் விவேக் பரத்வாஜ் கூறும்போது, ‘‘மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், ஓட்டல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. புரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வலுப்படுத்தப்படும்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close