[X] Close

ஆணவ அரசாங்கத்தை நடத்துகிறார் மோடி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:10 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி பலமான அரசை நடத்தவில்லை; மாறாக, ஆணவமான அரசை நடத்தி வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தியோரியாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பிரியங்கா பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பாய்கிறது.

இதுதான், மோடி கூறும் பலமான அரசாங்கமா? மக்களை ஒடுக்குவதற்கு பெயர் பலம் அல்ல. ஆணவம். அப்படி பார்த்தால், ஆணவமான அரசாங்கத்தைதான் மோடி நடத்துகிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close