[X] Close

மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமையும்: குலாம் நபி ஆசாத் உறுதி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:11 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிஹார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எழை மக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதுதான் பாஜக அரசின் 5 ஆண்டுகால சாதனையாகும். மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இதில், எங்கு பார்த்தாலும் பாஜக மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. இத்தேர்தலில் அக்கட்சிக்கு 125-க்கும் குறைவான தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

எனவே, இந்தத் தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியாது. பாஜக அல்லாத ஆட்சியே அமையும். அவ்வாறு அமையும் ஆட்சிக்கு, காங்கிரஸ் தலைமை வகித்தால் நல்லது. அவ்வாறு இல்லையென்றாலும், மற்ற கட்சி தலைவர்கள் பிரதமர் ஆவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காது. ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அகற்றுவது ஒன்றே எங்களின் பிரதான நோக்கமாகும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

முன்னதாக, குலாம் நபி ஆசாத்திடம் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close