[X] Close

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வைக்க 2 பேரை களமிறக்கி உள்ளது காங்கிரஸ்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்


2

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:09 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைவோம் என்று கருதும் காங்கிரஸ், அதற்கு பொறுப்பேற்க வைப்பதற்காக 2 பேரை களத்தில் இறக்கி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தியோ கரில் பாஜக சார்பில் நேற்று நடை பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த சுமார் 55 ஆண்டு கால மாக நாட்டை ஆட்சி செய்த ஒரு குடும்பத்தினரால் செய்ய முடியா ததை, பாஜக அரசு வெறும் 55 மாதங்களில் செய்து முடித்துள்ளது. கடந்த 5 ஆண்டு கால பாஜக தலைமையிலான ஆட்சியில் மேற் கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை நாடு பார்த்துள்ளது. அரசு மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. இதை கோயில் நகரத் தில் (தியோகர்) இருந்தபடி சொல் கிறேன். நேர்மையான அரசுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை நாட்டு மக்கள் எனக்கு வழங்கியதை பெருமையாகக் கருதுகிறேன்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும். இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி 2 பேரை களத்தில் இறக்கி உள்ளது. இதில் ஒருவர் (சாம் பிட்ரோடா), 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து கூறும் போது, “நடந்தது நடந்துவிட்டது. அதற்கு என்ன” என்கிறார். மற்றொருவர் (மணி சங்கர் அய்யர்), குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது என்னை தரக்குறைவாக பேசினார். அப்போது தான் கூறியது சரிதான் என்று அவர் மீண்டும் இப்போது கூறியுள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், நீங்கள்தான் பொறுப் பேற்க வேண்டும் என இந்த 2 பேருக்கும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பிஹார் மாநிலம் பாலிகஞ்ச் நகரில் நேற்று காலையில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “தேசிய பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சினை இல்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். தீவிரவாத தாக்குதலால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பு முக்கிய பிரச்சினை இல்லை என்று எப்படி சொல்ல முடியும். சமீபத்தில் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாஜக தலைமையிலான அரசு தக்க பதிலடி கொடுத்தது. இத்தகைய வழியின் மூலம் மட்டும்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close