[X] Close

ரூ.144-ல் அன்லிமிடெட் அழைப்புக்கள்: வந்துவிட்டது பதஞ்சலி சிம்


patanjali-to-offer-swadeshi-sim-cards

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 16:39 pm
  • அ+ அ-

கடந்த 4 ஆண்டுகளில் பதஞ்சலியும் பாபா ராம் தேவும் அவ்வளவு பிரபலமாகிவிட்டனர். காரணம் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு தூங்கப்போகும்போது பயன்படுத்த கொசுவிரட்டி வரை பதஞ்சலியின் ஆயுர்வேதப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. விளம்பரங்களும் அப்படித்தான். எந்தச் சேனைலத் திருப்பினாலும் வியாபித்துக் கிடக்கின்றன.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் சிம் கார்ட் அறிமுகம் செய்து தொலைதொடர்புத் துறையில் காலடி பதிக்கவுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவத்துடன் இணைந்து சுதேசி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

அப்படி என்ன ஸ்பெஷல்?
சுதேசி சம்ரித்தி சிம் கார்டில் ரூ.144-ல் அன்லிமிடெட் அழைப்புக்கள், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஆனால், முதற் கட்டமாக இந்த சிம் கார்டுகள், பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. பதஞ்சலி சிம் கார்டை வாங்குபவர்களுக்கு அதன் பொருட்கள் மீது 10% தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close