[X] Close

பாஜக அணியில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு; டெல்லியில் மே 23-ல் ஆலோசனை கூட்டம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கடிதம்


23

  • kamadenu
  • Posted: 16 May, 2019 07:16 am
  • அ+ அ-

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு பாஜக அணியில் இடம்பெறாத கட்சிகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் இடம்பெற் றுள்ள கட்சிகள் மற்றும் பாஜக அணியில் (தேசிய ஜனநாயக கூட்டணியில்) இடம்பெறாத கட்சி களுக்கு சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார். இதில் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக மே 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜக அணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. சோனியா காந்தியின் இந்த முயற்சி, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக கருதப்படுகிறது. தேர் தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இல்லாவிடில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உறுதியாக பங்கேற்க வாய்ப்புள்ளது.

பாஜக அணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளை இக்கூட் டத்தில் பங்கேற்கச் செய்ய சிறப்பு முயற்சி எடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் உடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முதல்வருமான கமல்நாத் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அப்போது மே 23 கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கமல்நாத் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இரு தலைவர்களும் அவர்களின் அரசியல் காலம் தொடக்கம் முதல் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் ஆவர். இதனால் கமல்நாத் மூலம் நவீன் பட்நாயக்கை காங்கிரஸ் அணுகியதாக கூறப்படுகிறது.

ஒடிசாவில் சமீபத்தில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடியும் முதல்வர் நவீன் பட்நாயக்கும் பார்வையிட்டனர். பிறகு இருவரும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் தேர்தல் முடிவு களுக்கு பிந்தைய சூழல் குறித்தும் இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் என ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

மே 23-ம் தேதி கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, டிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோருடன் நவீன் பட்நாயக் பங்கேற்பது முற்றிலும் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும். என்றாலும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவது அவ சியம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக அணியில் இடம்பெறாத கட்சிகளுக்கு சோனியா விடுக்கும் செய்தியாக இக்கடிதம் பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close