[X] Close

கொல்கத்தா வன்முறைகள்: வியாழன் இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


10

  • kamadenu
  • Posted: 15 May, 2019 21:04 pm
  • அ+ அ-

-தேவேஷ் கே.பாண்டே

வரும் மே 19ம் தேதி மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால் அங்கு திரிணமூல், பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது.

 

இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ எழுப்பிய தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரச்சாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது.  அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  சிலையை உடைத்தது பாஜகவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது.

 

தேர்தல் தொடங்கியதில் இருந்து இரு கட்சிகளுக்கும் இடையே சண்டை மண்டை உடைகிறது.  நேற்றைய வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

 

மேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

மேலும், முக்கியமான உத்தரவாக, முதன்மைச் செயலர் (உள்துறை) மற்றும் சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் ஆகியோரைப் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close