[X] Close

'தேசத்தை தான் ஒருவரால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்று மோடி நினைக்கிறார்': ராகுல் காந்தி தாக்கு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:50 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்த தேசத்தைத் தான் ஒருவரால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்திவிட்ட நிலையில் வரும் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், பரித்காட் பகுதியில் உள்ள பார்காரி நகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது சித்திக்கை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

ஒருநேரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு கிண்டல் செய்தவர் பிரமதர் மோடி. இப்போது 5ஆண்டுகள் ஆட்சியின் முடிவில், இப்போது மன்மோகன்சிங்கை மீண்டும் மோடி கிண்டல் செய்ய முடியாது. ஏனென்றால், இந்த நாடே மோடியை கிண்டல் செய்கிறது.

இந்த தேசத்தை தான் ஒருவரால் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்று பிரதமர் மோடி நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், உண்மையில் இந்த தேசத்தை வழிநடத்துவது, நிர்வகிப்பது மக்கள் மட்டுமே.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் விவாதம் செய்ய துணிச்சல் இருக்கிறதா என்று கேட்டும் மோடியிடம் இருந்து பதில் இல்லை.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கப்பார் சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டி) ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டன, லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் சேர்த்துள்ள கறுப்புப்பணத்தை மீட்டு, மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், இதுவரை செய்யவில்லை, மக்களிடம் பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளார் மோடி. அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கித்தரப்படும் என்று கூறியும் அதை செயல்படுத்தவில்லை

கடந்த 2015-ம் ஆண்டில் பஞ்சாப்பில் மதவழிபாடு தலங்களில் இருக்கும் பொருட்கள், சிற்பங்களை சிதைக்கும் சம்பவங்கள் நடந்தன. அவ்வாறு இனிமேல் நடக்காமல் தடுத்து, அந்த செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுப்போம் என்பதை உறுதி செய்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close