[X] Close

பிஹார் மக்களுக்காக குரல் கொடுத்தவர் சிறையில் உள்ளார்: நிதிஷ் குமாருக்கு லாலு மகன் கடிதம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:12 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பிஹாரில் எந்த ஒரு வளர்ச்சிப் பணியுமே நடைபெறவில்லை. பிஹார் மக்களுக்காக குரல் கொடுத்த லாலு சிறையில் உள்ளார் என குற்றஞ்சாட்டி முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார் பிஹார் முன்னாள் முதல்வரின் மகன் தேஜஸ்வி யாதவ்.

அந்தக் கடிதத்தில்..

அன்புள்ள நிதிஷ் மாமா, 1998 முதல் 2004 வரை நீங்கள் மத்திய அமைச்சராக இருந்துள்ளீர்கள். அந்த காலகட்டத்தில், மத்திய அரசிடமிருந்து பிஹார் மாநில வளர்ச்சிக்கு என்று எவ்வளவு பணம் பெறப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்திலும் பிஹாருக்கு மத்தியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று ஒப்பீடு செய்த மதிப்பிட நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? நீங்கள் மக்கள் மத்தியில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் பிஹாரின் வளர்ச்சி என்று சாலைகளையும் மின் விளக்கு வசதிகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே அவை, 2004, 2014 ஐமு கூட்டணி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது எனது தந்தை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

சமுதாயத்தின் ஏழை மக்களுக்காக குரல் கொடுத்த அந்த நபர் இப்போது சிறையில் இருக்கிறார். நீங்களோ முசாஃபர்பூரில் காப்பகத்தில் இருந்தவர்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கிய பிரஜேஷ் தாக்கூரை உங்கள் தேர்தலுக்கு பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் மே 23-ம் தேதியன்று மக்கள் முடிவு கட்டுவார்கள். மக்கள் அளிக்கும் தேர்தல் தீர்ப்பே ஜனநாயகத்தின் மிகப்பெரிய நீதிமன்றம். நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி பெற்று முன்னேறுவோம். ஒளி விளக்கு ஒளிரும். இருள் அஞ்சி ஓடும்.

இவ்வாறு அக்கடிதத்தில் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

லாலு கட்சியின் சின்னம் லான்தர்ன் விளக்கு என்ப்து குறிப்பிடத்தக்கது. அதனை முன்வைத்தே தேஜஸ்வி விளக்கு ஒளிரும்; இருள் அஞ்சி ஓடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) லாலு பிரசாத் யாதவ் நிதிஷ் குமாருக்கு கடிதம் எழுதினார். அதில், பிஹாரில் ஆட்சி சரியில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இப்போது, லாலு மகன் கடிதம் எழுதியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close