[X] Close

6-ம் கட்டத் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிட்டது: அமித் ஷா நம்பிக்கை


6

  • kamadenu
  • Posted: 15 May, 2019 14:43 pm
  • அ+ அ-

6-ம் கட்டத் தேர்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது, எதிர்க்கட்சித் தலைவரை தான், சில கட்சிகள் தற்போது தேர்வு செய்து கொண்டிருக்கின்றன என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் 7-ம் கட்ட தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

மக்களவைத் தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என கேட்கிறீர்கள். நான் நாடுமுழுவதும் பயணம் செய்து வருகிறேன். மக்களின் எண்ணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 6-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்றுவிட்டது.

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும்போது பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.

சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பயனற்றது. அவர்களை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை அவர்கள் தேர்வு செய்யவில்லை. எதிர்க்கட்சித் தலைவரை தான் தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இந்த முறையும் காங்கிரஸூக்கு அந்த பதவி கிடைக்காது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close