[X] Close

‘‘இந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது’’ - கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 13:21 pm
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது, தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என பதிலளித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தினம் ( ஏப்ரல் 12) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக ‘இந்தியா நியூஸ் நியூஸ் எக்ஸ்’ தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அவரிடம் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலளித்ததாவது:

இந்து என கூறிக் கொள்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி தீவிரவாதியாக இருந்தால், அந்த நபர் இந்துவாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பது இந்துக்களின் ஆழ்ந்த மதநம்பிக்கை. இந்த நம்பிக்கை உடைய ஒருவர் மற்றவர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ மாட்டார். அவரை இந்துமதம் அனுமதிக்காது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close