[X] Close

கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையம் முடிவெடுக்க அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 12:38 pm
  • அ+ அ-

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன்தினம் ( ஏப்ரல் 12) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையாகி உள்ளது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாக பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாயா மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அரசியல் லாபங்களுக்காக மததுவேசமாக பேசுபவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையே முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close