[X] Close

பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர் மோடி: மாயாவதி தாக்கு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 12:28 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

"மோடி பொது வாழ்வுக்கு தகுதி அற்றவர். நான் உ.பி. முதல்வராக இருந்தபோது மாநிலம் வன்முறையற்று இருந்தது ஆனால், மோடி  ஆட்சியின் கீழ் வன்முறையால் நிரம்பியிருக்கிறது" என விமர்சித்திருக்கிறார் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மாயாவதி, "உத்தரப் பிரதேச முதல்வராக நான் இருந்த காலத்தைவிட அதிக காலம் மோடி குஜராத் முதல்வராக இருந்திருக்கிறார்.

ஆனால் அவரது முதல்வர் வரலாறு கறை படிந்தது. அது பாஜகவுக்கும் கறை சேர்த்தது. மதவாத அடையாளம் தந்தது.

மாறாக எனது ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் வன்முறையே நடந்ததில்லை. மாநிலம் கலவரமற்று இருந்தது.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் சரி இந்தியப் பிரதமரான பின்னரும் சரி அவரது பதவிக்காலம் வன்முறை நிறைந்ததாகவே இருக்கிறது. அவர் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர்.

மற்ற அரசியல் கட்சிகள் மீது ஊழல் சாயம் பூசிக்கொண்டிருக்கிறது பாஜக. ஆனால், பாஜகதான் உண்மையிலேயே அதிகமான ஊழல்வாதிகளைக் கொண்ட கட்சி" எனக் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

மிக அதிகமான மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இறுதிக் கட்டமாக மே 19-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரதமர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் உத்தரப் பிரதேசத்துக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close