[X] Close

அமித் ஷா பேரணியில் வன்முறை: பாஜக, திரிணாமுல் பரஸ்பரம் குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க முடிவு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 09:48 am
  • அ+ அ-

கொல்கத்தாவில் அமித் ஷா பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் இன்று பரஸ்பரம் புகார் அளிக்கவுள்ளன.

பாஜக தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோ‌ஷமிட்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். உடனே பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பல்லைக்கழக வளாகத்தில் உள்ள ஈஷ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கும்பை கலைத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து மம்தாவும் அமித் ஷாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவத்துக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘‘திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். அவருக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்’’ என்றார்.

mamtha.JPG 

பின்னர் சம்பவ இடத்தை சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பாது அவர் கூறுகையில் ‘‘அமித்ஷா என்ன அனைத்திற்கும் மேலானவரா. தன்னை பற்றி அவர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என நினைக்கும் அளவுக்கு அவர் என்ன மேலானவரா. வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்’’ எனக் கூறியுள்ளார்.

இதனிடையே அமித் ஷா பேரணியில் நடந்த கலவரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதுபோலவே பதிலுக்கு திரிணாமுல் காங்கிரஸூம் புகார் அளிக்கவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close