[X] Close

இரோம் ஷர்மிளாவுக்கு இரட்டைக் குழந்தைகள்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:58 am
  • அ+ அ-

-இரா.வினோத்

கடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் ராணுவத்தினரால் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார் இரோம் ஷர்மிளா.

கடந்த 2016-ல் போராட்டத்தை கைவிட்டு அரசியல் பாதைக்கு திரும்பிய இரோம் ஷர்மிளா, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். இதில் அவர் படுதோல்வி அடைந்தார். இதையடுத்து 2017-ல் தன் நீண்ட கால காதலர் டெஸ்மாண்ட் அந்தோணியை கொடைக்கானலில் பதிவுத் திருமணம் செய்தார். கர்ப்பமான பின்னர் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த இரோம் ஷர்மிளாவுக்கு கடந்த 11-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.மல்லேஷ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 12-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து இரோம் ஷர்மிளாவின் கணவர் டெஸ்மாண்ட் அந்தோணி கூறுகையில், “அன்னையர் தினத்தில் இரோம் ஷர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கு நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என பெயர் சூட்டி இருக்கிறோம். தாயும், குழந்தைகளும் நலமோடு இருக்கிறார்கள். இரும்பு மனுஷியாக இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு இது புதிய தொடக்கம். இந்த புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்குகிறோம்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close