[X] Close

அமித் ஷா பிரச்சாரத்தில் வன்முறை


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:55 am
  • அ+ அ-

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் பரஸ்பரம் கற்களை வீசி தாக்கினர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அமித் ஷாவின் வாகனத்தை குறிவைத்தும் கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தாக்குதல், போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து மம்தாவும் அமித் ஷாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close