[X] Close

நடிகை போன்ற தோற்றத்தில் வந்த தேர்தல் அதிகாரியின் புகைப்படம் இணையத்தில் வைரலானது


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:54 am
  • அ+ அ-

மஞ்சள் நிற புடவை அணிந்தபடி சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் தேர்தல் பணிக்கு வந்த அழகான பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்தவர் ரீனா திவிவேதி (32). பொதுப்பணித் துறையில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்து வரும் இவருக்கு, லக்னோவில் தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டன.

இதற்காக, லக்னோவில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனிடையே, தாம் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு, ரீனா திவிவேதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றார். மஞ்சள் நிற புடவையில் சினிமா நடிகை போன்ற தோற்றத்தில் வந்த அவரை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அவரது புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நாடு முழுவதும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

‘உமன் ஆன் யெல்லோ சாரி' (மஞ்சள் புடவையில் பெண்) என்ற ஹேஷ் டேக்குடன் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தால் ஒரே நாளில் அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்துவிட்டார்.

இதுகுறித்து ரீனா திவிவேதி கூறியதாவது:எனக்கு 32 வயதாகிறது. எனது மகன் 9-ம் வகுப்பு பயில்கிறான். இத்தனை வயதுக்கு பிறகும், எனது புகைப்படம் பலரால் பகிரப்படுவதையும், என் மீது மற்றவர்களின் கவனம் திரும்புவதையும் மிகவும் ரசிக்கிறேன். ஒரு சில நாட்களுக்குள்ளாக, சினிமா நட்சத்திரமாக மாறியதை போலவே உணர்கிறேன். எங்கு சென்றாலும் என்னை பலர் அடையாளம் கண்டுகொள்கின்றனர். இதனை மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close