[X] Close

அரிக்கேன் விளக்கு பிரகாசமாக எரியும்: நிதிஷ் குமாருக்கு லாலு பதிலடி


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:50 am
  • அ+ அ-

பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சின்னமாக அரிக்கேன் விளக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பும் உள்ளது.

இந்நிலையில் நிதிஷ்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தில், “பிஹாரில் மின்சார வசதி மேம்பட்டுள்ளது. எனவே அரிக்கேன் விளக்குகளின் காலம் முடிந்துவிட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பு மங்கி வருகிறது” என்று குறிப்பிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நிதிஷ்குமாருக்கு சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு எழுதிய திறந்த மடலில்,

“அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் சின்னமாக அரிக்கேன் விளக்கு உள்ளது. அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் சமத்துவமின்மை, வெறுப்புணர்வு, அட்டூழியம், அநீதி ஆகிய இருள்களை நாங்கள் நீக்கியுள்ளோம். தொடர்ந்து இதை நாங்கள் செய்வோம். ஆனால் உங்களின் அம்பு சின்னம் வன்முறை மற்றும் ரத்தப்பெருக்கை அடையாளப்படுத்துகிறது. இது ஏவுகணைகளின் காலம் என்பதால் அம்பு வழக்கொழிந்துவிட்டது. உங்கள் அம்பை பயன்படுத்தி தாமரையில் (பாஜகவின் சின்னம்) துளையிடுவதா அல்லது அதில் தஞ்சம் அடைவதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 11 கோடி மக்களின் முதுகில் குத்த நீங்க அம்பை பயன்படுத்தியதால் அரிக்கேன் விளக்கு முன்பை விட பிரகாசமாக எரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை சமூக வலைதளங்களிலும் ஆர்ஜேடி வெளியிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close