[X] Close

பாகிஸ்தானின் பாலகோட் தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் கிண்டல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:51 am
  • அ+ அ-

பாகிஸ்தானின் பாலகோட் தாக்குதலின்போது மேகக்கூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தான் ரேடாரிலிருந்து தப்பிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “மோடிஜி, இந்தியாவில் மழை பெய்யும் போதெல்லாம் அனைத்து விமானங்களையும் ரேடாரில் இருந்து காணாமல் போகச் செய்யுங்கள்” என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், “பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது வானிலை மோசமானது. மேகக்கூட்டங்கள் இருந்ததால் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும், மேகமூட்டத்துடன் மழை பெய்வது நமக்கு சாதகமான அம்சம்தான். இதனால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் சிக்காமல் தப்பிவிடும். எனவே, திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தலாம் என்று தெரிவித்தேன்” என்றார்.

ஆனால், இவரது கருத்து அறிவியல் ரீதியானது இல்லை என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இதைக் கிண்டல் செய்யும் வகையில் ராகுல் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதுபோல, நடிகர் அக் ஷய் குமாருடனான கலந்துரையாடலின்போது, “சிறுவயதில் எனக்கு மாங்காய் பிடிக்கும். இப்போதும் பிடிக்கும்” என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் ராகுல் காந்தி நேற்று கூறும்போது, “மோடிஜி, மாங்காயை எப்படி சாப்பிட வேண்டும் என சொல்லிக் கொடுத்தீர்கள். வேலையில்லாத இளைஞர்களுக்காக என்ன செய்தீர்கள் என கூறுங்கள்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close