[X] Close

கணவரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது: உயர் நீதிமன்றம்


wife-has-the-right-to-know-husband-s-salary-details-rules-madhya-pradesh-high-court

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 11:07 am
  • அ+ அ-

கணவரின் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தனி நபர் பெஞ்ச் முன் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. சுனிதா ஜெயின் என்ற பெண் தனது கணவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும். அவருக்கு அதிகமாக சம்பளம் வந்தும் தனக்கு மிகக் குறைந்த அளவே ஜீவனாம்சம் அளிப்பதாகவும் அதிக சம்பளம் பெறுவதால் கூடுதல் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனை நிரூபிக்குமாறு நீதிமன்றம் கூறவே, சுனிதா அவரது கணவரிடம் பே ஸ்லிப்பைக் கேட்டுள்ளார். அவர் அதைத்தர மறுக்கவே ஆர்டிஐ மூலம் பே ஸ்லிப்பைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த பே ஸ்லிப்பில் சுனிதாவின் கணவரின் உண்மையான சம்பள விவரம் தெரியவந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கணவரின் சம்பளம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close