[X] Close

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்க வாய்ப்பு: மழையளவு எப்படி இருக்கும்? ஸ்கைமெட் கணிப்பு


4

  • kamadenu
  • Posted: 14 May, 2019 17:34 pm
  • அ+ அ-

-ராய்டர்ஸ்

2019-ம் ஆண்டில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என்று தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் அறிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் ஆனால், இந்த முறை 3 நாட்கள் தாமதமாக 4-ம் தேதி தொடங்குகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளில் வரும் 22-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு  இருப்பதாக ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்கைமெட் வானிலை மையத்தின் மேலாண் இயக்குநர் ஜதின் சிங் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை, இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்றே கணித்துள்ளோம். பல்வேறு மாதிரிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இயல்புக்கு குறைவான மழை பெய்யும் என்றே தெரியவந்துள்ளது.

monsoon-kerala-1527485654.jpg 

அந்தமான், நிகோபர் தீவுகளில் வரும் 22-ம் தேதி அல்லது 2 நாட்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான மேகக்கூட்டங்கள் வந்துவிடும்.

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி பருவமழை தொடங்கும் என்று கணித்துள்ளோம். கடந்த ஆண்டு முன்கூட்டியே மே 30-ம் தேதி தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்தமுறை 3 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது.

நாட்டில் உள்ள 4 மண்டலங்களிலும் இந்த ஆண்டு பருவமழை இயல்புக்கும் குறைவாகவே இருக்கும். வடமேற்கு இந்தியா, தென் மாநிலங்களைக் காட்டிலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழை மிகவும் குறையும்.

இயல்புக்கும் மிக அதிகமாகவும், இயல்பைக் காட்டிலும் அதிகமாகவும் மழை பெய்ய எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. அதேசமயம் இயல்பான மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பும், இயல்புக்கும் குறைவாக மழை பெய்ய 55 சதவீதம் வாய்ப்பும், வறட்சி நிலவுவதற்கு 15 சதவீதம் வாய்ப்பும் இருக்கிறது.

MONSOON.jpg 

தென் இந்தியா

தென்இந்தியா பகுதிகளைப் பொறுத்தவரை நீண்டகால சராசரியில் 95 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது, அதாவது 716 மிமி மழை பெய்யலாம். குறிப்பாக கர்நாடகத்தின் வட உள்பகுதிகள், ராயலசீமா ஆகிய பகுதிகளில் மழைபெய்வது குறையும், கேரளா, கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை ஓரளவுக்கு நன்றாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தென் இந்தியாவில் உபரி அளவாக மழை பெய்ய 5 சதவீத வாய்ப்பும், இயல்புக்கு அதிகமாக மழை பெய்ய 10 சதவீத வாய்ப்பும், இயல்பான மழைக்கு 60 சதவீதமும், இயல்புக்கும் குறைவாக மழை பெய்ய 15 சதவீத வாய்ப்பும், பற்றாக்குறை மழைக்கு 10 சதவீதமும் வாய்ப்பு உண்டு

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close