[X] Close

பிரதமர் மோடியின் அரசு மூழ்கும் கப்பல்; ஆர்எஸ்எஸ்கூட கைவிட்டுவிட்டது: மாயாவதி காட்டம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 13:33 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

பிரதமர் மோடியின் அரசு ஒரு மூழ்கும் கப்பல். ஆர்எஸ்எஸ் அமைப்பு கூட மோடியின் அரசைக் கைவிட்டுவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. இருவரும் கடுமையாக கட்சி சார்ந்த விமர்சனங்களிலும், தனிமனிதர் சார்ந்த விமர்சனங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தானில் சமீபத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தலித் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மாயாவதி என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் மாயாவதி, பிரதமர் மோடி தனது மனைவியுடன் வாழாதது குறித்து தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுத்திருந்தார். இதற்கு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதிலடியில், பொதுவாழ்க்கைக்குத் தகுதியில்லாதவர் மாயாவதி என்றார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இன்று ட்விட்டரில் பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்துள்ளார். அதில், " பிரதமர் மோடியின் அரசு மூழ்கும் கப்பல். அதற்கு சாட்சியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கூட அவர்களைக் கைவிட்டுவிட்டது. மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் பிரதமர் மோடி கடும் நடுக்கத்திலும், பதற்றத்திலும் இருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சுத்தமான பிரதமர் நாட்டை வழிநடத்த முடியும்.

மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில், பல தலைவர்கள் சேவகர்கள் என்றும், தலைமை சேவகர்கள் என்றும், தேநீர் விற்பனையாளர் என்றும், காவல்காரர் என்றும் பேசி வருகிறார்கள். எங்களுக்கு இப்போது தேவை உண்மையான பிரதமர் மட்டுமே. பொய்கள் மூலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது போதும். இப்போது மக்களை முட்டாளாக்க முடியாது

அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் கோயில்களுக்குச் செல்வதையும், பேரணி நடத்துவதையும் வழக்கமாக வைக்கிறார்கள். இதற்காக அதிகமாக செலவு செய்கிறார்கள். இவற்றை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தேர்தல் விதிமுறை மீறலாகும். கோயில்களுக்குச் செல்லுதல், ரோட் ஷோ நடத்தும் வேட்பாளர்களைத் தடை செய்ய வேண்டும்'' என்று மாயாவதி தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close