[X] Close

மம்தா புகைப்படம் மார்ஃபிங்;; கைதான பாஜக பெண் தலைவருக்கு ஜாமீன்: மன்னிப்பு கடிதம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:59 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, அவதூறு செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பாஜக இளைஞர் அமைப்பு பெண் தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுக்க இன்று உத்தரவிட்டது.

நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா செய்திருந்த மேக் அப், ஆடை அலங்காரம் ஆகியவை பெரும் விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் ஆளானது. அந்தப் புகைப்படத்தில் பிரியங்கா முகத்துக்குப் பதிலாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி முகத்தை வைத்து மார்ஃபிங் செய்து, ஃபேஸ்புக்கில் பிரியங்கா சர்மா எனும் பெண் கடந்த 9-ம் தேதி வெளியிட்டார்.

priyanka-sharma-1200.jpg 

ஹவுராவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா, பாஜகவின் இளைஞர் பேரவையின் தலைவராக இருந்து வருகிறார். முதல்வர் மம்தா பானர்ஜியை அவதூறு செய்யும் வகையில் புகைப்படம் வெளியிட்டது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸார் பிரியங்கா சர்மா மீது ஐபிசி 500, 66ஏ, 67ஏ ஆகிய பிரிவின் கீழும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு தொடர்ந்து கடந்த 10-ம் தேதி பிரியங்கா சர்மாவைக் கைது செய்தனர். பிரியங்கா சர்மாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க ஹவுரா உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. இதையடுத்து, பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரினர். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே. கவுல் ஆஜராகினார்.

priya.jpg 

இந்நிலையில், விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா பிறப்பித்த உத்தரவில், " பாஜக இளைஞர் அமைப்புத் தலைவர் பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறோம்.  பிரியங்கா சர்மா விடுவிக்கப்படும் போது, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு அவர் சிறையில் இருந்து செல்ல வேண்டும். பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம்" என உத்தரவிட்டனர்.

பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அசாம் மாநில அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர் பிரியங்கா சர்மாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, விடுவிக்க உதவி செய்வதாகத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close