[X] Close

ரூ.10 ஆயிரத்துக்கு தந்தையால் விற்பனை; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விதவைப் பெண் தற்கொலைக்கு முயற்சி


10

  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:07 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே ஹபூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பெண், அண்மையில் தனது கணவனை இழந்தார். பெண்ணின் தந்தையும், அவரது உறவுக்கார பெண்ணும் இணைந்து ரூ.10 ஆயிரத்துக்கு ஒருவரிடம் அந்தப் பெண்ணை விற்பனை செய்துள்ளனர். பெண்ணை வாங்கிய நபர், பல வீடுகளுக்கு அந்த பெண்ணை வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடுகளில் அந்தப் பெண்ணை சிலர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து பலாத்காரம் நடந்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணை அவர்கள் சித்ரவதையும் செய்துள்ளனர். இந்த கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண், போலீஸ் நிலையத்தை அணுகியுள்ளார். ஆனால் அவரது வழக்கைப் பதிவு செய்ய போலீஸார் மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் 28-ம் தேதி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தோர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவர் தற்போது டெல்லியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஹபூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி யஷ்வீர் சிங் கூறும்போது, “இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை தேவை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ஸ்வாதி மலிவால் கூறியுள்ளதாவது: மிகவும்ஏழ்மை நிலையிலுள்ள அந்தபெண்ணை சித்ரவதை செய்துள்ளனர். வீட்டு வேலை வாங்கியதோடு மட்டுமல்லாமல் பாலியல் வன் கொடுமையும் செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தை அணுகியபோது அந்த வழக்கைப் பதிவு செய்ய போலீஸார் முன்வரவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த 14 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிடவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close