[X] Close

பட்டினியால் 500 காட்டெருதுகள் உயிரிழப்பு: சிக்கிம் பள்ளத்தாக்கில் அவலம்


500

  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:08 am
  • அ+ அ-

சிக்கிம் மாநிலம் முகுதாங் பள்ளத்தாக்கில் காட்டெருதுகள் அதிக அளவில் உள்ளன. இந்தகாட்டெருதுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல ஏராளமான பேர் இங்கு வசித்து வருகின்ற னர். காட்டெருதுகளின் பால்,பாலாடைக்கட்டி வெண்ணெய்போன்றவையே மேய்ச்சல்காரர் களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்தப் பகுதியானது சீனாவின் எல்லையையொட்டி அமைந் துள்ளது.

இந்த முகுதாங் பள்ளத்தாக்கு கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பள்ளத்தாக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவு, குளிர் நிலவி வருகிறது. கடும் குளிர், பனிப்பொழிவைத் தாங்க முடியாமல் காட்டெருதுகள் மேய்ச்சலில் இருந்தவர்கள் காட்டெருதுகளை அங்கேயே விட்டுவிட்டு மலையடிவாரத்துக்கு வந்துவிட்டனர். இதுகுறித்து வடக்கு சிக்கிம் மாவட்ட ஆட்சியர் ராஜ் குமார் யாதவ் கூறும்போது, “இதுவரை அங்கு 300 காட்டெருதுகள் பலியாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் உள்ளூர் மக்கள் கொடுத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இறந்த காட்டெருதுகளின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான தகவலைச் சேகரிக்க கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த ஒரு குழுவும், சிவில் நிர்வாகத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவும் அங்கு சென்றுள்ளன.

அந்தக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையைக் கொண்டே எத்தனை காட்டெருதுகள் பலியாகின என்பது தெரியவரும். இந்தசம்பவங்கள் எதிர்பாராமல் நடந்தவையாகும்.

அப்பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் கால்நடைத் தீவனங்களை போடுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் கடும் பனிப்பொழிவு இருந்ததால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது” என்றார்.

1968, 1985, 1995-ம் ஆண்டுகளில் இதுபோன்று அதிக அளவில்காட்டெருதுகள் பட்டினியால் பலியாகின என்று எருது மேய்ப்பவர்கள் சிலர் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close